tamilnadu

img

ஐஸ்கிரீம் வர்த்தகத் துறையில் ரூ. 30 ஆயிரம் கோடி இழப்பு!

புதுதில்லி:
கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, ஐஸ்கிரீம் வர்த்தகமும் கடும் அடிவாங்கியுள்ளதாக அத்துறையினர் கூறியுள்ளனர்.

பிப்ரவரி துவங்கி ஜூன் வரை, ஐஸ்கிரீம்களுக்கான தேவை இந்தியாவில் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஒரு ஆண்டுக்கான ஒட்டுமொத்த விற்பனையில் அதிகபட்ச விற்பனை வருவாய்- அதாவது 60 சதவிகித லாபம், இந்த 5 மாதங்களில் பெறப்படும்.ஆனால், கொரோனா பொது முடக்கம், ஐஸ்கிரீம் விற்பனையை முற்றிலும் முடங்கியதோடு ஐஸ்கிரீம்களுக்கான தேவையை யும் குறைத்து விட்டது என்று “ஹிந்துஸ்தான் யூனிலிவர்” நிறுவனம் தெரிவித்துள்ளது. அமைப்பு சார்ந்த ஐஸ்கிரீம் வர்த்தகம், அமைப்பு சாராத வர்த்தகம் என ஒட்டுமொத்தமாக ரூ. 30 ஆயிரம் கோடி அளவிற்கு இழப்பைச் சந்தித்திருப்பதுடன், ரூ. 6 ஆயிரம் கோடி வரை நஷ்டத்தையும் ஐஸ்கிரீம் வர்த்தகம் கண்டுள்ளதாக “ஹிந்துஸ்தான் யூனிலிவர்” கூறியுள்ளது.இதில் அதிகம் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் புலம்பெயர் தொழிலாளர்கள்தான். ஏனெனில், தெருக்களில் ஐஸ்கிரீம் விற்பனை செய்யும் வண்டிகள் பெரும்பாலும் புலம்பெயர் தொழிலாளர்கள் மூலமே இயக்கப்படுவதாகும்.தற்போதைய தொழில் முடக்கத்தால், அவர்கள் மிக அதிகமான அளவில் வேலையிழப்பைச் சந்தித்துள்ளனர். வருவாயை மட்டுமன்றி, வாழ்வாதாரத்தையும் இழந்து சொந்த ஊர்களில் முடங்கியுள்ளனர்.

;